Monday, August 11, 2014

மலைமகள்!


ஒரு மலைமகளின் சிரிப்பு
இவ்வளவு மயக்கம் தருமா!
இரு கயல்விழிகளின் ஈர்ப்பு
இவ்வளவு கவர்ச்சி தருமா!

ஆரஞ்சுநிற கோவை அதரங்கள்
எவ்வளவு தீஞ்சுவை தருமோ!
கூந்தலள்ளி முடிகையில் இவள்வடிவு
எவ்வளவு பேரின்பாசை தருமோ?

இயற்கை ஈந்த இளையவளே!
மலைமகள் சுரந்த குலமகளே!
பெண்மையில் மென்மை நவிழ்பவளே!
மனத்தில் மென்மொட்டாய் மலர்பவளே!

காதல் காமம் கலவி துய்க்கும் வயதில்
கண் கன்னம் அங்கம் தூக்கம் கெடுப்பதேன்!
மென்முறுவல் குமிழ்சிரிப்பும் இளமைத்-தீ வனப்பும்
அழகாய் ஆழமாய் இன்பமாய் பசலை கொள்வதேன்!

நட்பு அன்பு காதல் வேண்டும்!
உண்மை உள்ள-உறவு உடனே வேண்டும்!
பெறுவருத்தம் இன்றி நிறைசூழல் வேண்டும்!
பெண்மைபோற்றும் ஆண்மையாய் ஆளுமை வேண்டும்!

Monday, September 30, 2013


அழைப்பில் மகிழும்...


அழகிய மென்முறுவல்கள்! 
அன்பான நாவில்மொழிகள்!
பாசமான பலவுரைகள்!
பண்பான அறிவுரைகள்!
சிற்சில கோபதாபங்கள்!
பற்பல வண்ணஎன்ணங்கள்!

தோழியாய் தோழனாய்
மணமாலை சூடும் எம்மை
வாழ்த்த வருமாறு அழைக்கிறேன்

அழைப்பில் மகிழும் மணமகள்:

Tuesday, June 11, 2013


*** வில்வரசு பாண்டியன் ***
அழகே வில்வழகே!
ஆருயிரே அரசே!
தென்னவனே பாண்டியனே!

உன் பார்வையில் நான் என்னை பார்க்கின்றேன் எனைஈன்ற தாய் சிலிர்த்தென்னை பார்த்தது போல!
எமதுயிர் புதுஉடலோடு அளவலாவுவதை பார்க்கும் பொழுதுகள் விவரிக்க முடியாத சிலிர்ப்பு கூச்செரியல்கள்!
உன்னில் என்னை பார்க்கும் போதும் எந்துணைவி உன்னை கொஞ்சும் போதும் ஆயிரம் கமலங்கள் மலர்கின்றன கையளவு இதயக்கூட்டில்.

உன் மழலை பார்வை உன் குழந்தையாய் என்னை மாற்றுகிறது.
உன் மென்மை தழுவல் இறைவனுக்கு அருகில் என்னை சேர்க்கிறது.
உன் அழகிய புன்முறுவல் அத்தனை இன்பத்தையும் கடைசிக்கு தள்ளுகிறது.

உன் இருவிழி அசைவில் நான் சிறியவனாகி போனேன்.
என் ஆணவம் அமிழ்ந்து போனது. அகங்காரம் நொறுங்கி போனது.

ஒன்றும் பேசாமலே எல்லாம் சொன்னாய்.
ஒன்றும் தெரியாமலேயே எல்லாம் தெளிவித்தாய்.
ஒன்றும் செய்யாமலேயே எல்லாம் செய்தாய் - நீ என்னில்.

உன்னில் அடங்கி உன்னில் மயங்கி உன்னை உணரும் பொழுதுகள்
எங்கும் நிரம்பி விரவிப் பரவும் இறைப்பொழுதுகள் .
ஆம் நீ இறைவன்! மழலை இறைவன்! 



வாழ்க வளமுடன்!

Monday, June 3, 2013


விநோதமானவள்!

கடற்கரை மணலில் கட்டுமரத் தோணியில்
நிலவுகுளிர் மொழியாய் பொழிந்தவள் நீ!

அழகுவிழி கதிர்வீச செவ்விதழ் வாய்பேச
மனம்திறந்து குணம் காட்டியவள் நீ!

ஐம்புலனும் உனைநோக்க ஐம்புலனையும் நான்நோக்க
மெய்யாய் மெய் பேசியவள் நீ!

பின்பனி குளிரில் பிசுபிசு ஈரக்காற்றில்
வல்லினம் தன்னோடு மெல்லினமானவள் நீ!

குற்றமற்ற நெஞ்சோடு அச்சமற்ற பேச்சோடு
மழலையாய் மலராய் மலர்ந்தவள் நீ!

நான் கவிஞனானேன்  
கவிதையாய் உன்னை சுவாசித்தால்

என்னிதயம் மலர்கிறது
மலராய் நீ மணம் பரப்புவதால்

வெள்ளந்திப் பெண்ணே
செவ்வந்தி சிவப்பழகே

கண்சிமிட்டும் மின்மினியே
மெல்லிதழ் தேன்மொழியே

உன்னால் நானனைந்தேன் 
நட்புமழையில் தொப்பல்தொப்பலாய்!

சிலமணித் துளியில் ஓருயிரை
ஆறறிவினை மகிழ்வித்த இளமொட்டே

உன் இனிமை சிறக்கட்டும்
உன் இளமை நீடிக்கட்டும்
உன் வளமை பெருகட்டும்

உன்னால் எல்லோரும் மகிழட்டும்
நீனினைப்பது போல் மகிழ்வாய் நீயும்.

வாழ்க வளமுடன்!

Wednesday, June 24, 2009

பசும்பொன் வாழ்த்து.

எனை ஈன்றதாய் வாழ்க !
தாய் தந்த மொழி வாழ்க !
எனை யார்க்கும் எந்தை வாழ்க !
எந்தை வாழ் இப்பூ வாழ்க !
அறிவுத்திரு வாழ்க !
அஃதீந்த ஆசான் வாழ்க !
இறையே எனைப் புறக்க
இயற்கையே உன்னை இரந்து
விசும்புகீழ் கரைநீக்கி
விவேகம் விளைந்தருள
பசும்பொன் தேவரவர்
பதங்கள் பற்றினமே !
வேலை

காலம் போன காலை,
பாடம் புகட்டும் வேலை.

அரை ஞான் வயிற்றுக்கு
அறுபதாண்டு பசி.

முழுவாழ்வு கனவு
மூன்று வேலை உணவு

நரை திரை வந்தும் வாடா
உலை என் வயிறு.

காலமெல்லாம் சாப்பிட்டாலும்
காலனுக்கு சுவையாவேனோ!

எல்லோரையும் மறந்து
எல்லோரா கட்டப் போகிறோனோ!

அத்தனையும் இழந்து
அஜந்தாசிலை செய்யப் போகிறோனோ!

நரம்பெல்லாம் தோய்ந்து
நாளைக்கு சேமிப்பேனோ!

ஊனுடல் அழித்து பலர்க்கு
பல்லாக்கு சுமப்பேனோ!

ஏய்! அடிமை தேசமே!
பாம்பாட்டிக் கூட்டமே!

காலமெல்லாம் வேலை
ஓலை கட்டும் நாளை

எனக்கு மட்டுமா! இல்லை
எல்லோரும் இப்படித்தானா?
என்னவனின் ஆசைகள்

அவள் விழிகள்
அவள் செவிகள்
அவள் கூந்தல்
அவள் நடை
அவள் உடை
அவள் உதடு
அவள் நேர்வடு
அவள் கூந்தல்
அவள் புன்முறுவல்

நண்பனின் புலம்பல் இது
என் செவிக்கல்ல

அவன்தன் காகிதக் காதுகளுக்கு
பேனாவின் முனகலுக்கு.

அதே இளவலின் இயம்பல்
இளவேனில் பின்பனி புலம்பல்

காதல் பெரிதா? கடமை பெரிதா?
உதிர்த்தான் உதட்டில் பதிலும்

இரண்டையும் களித்து விடு
களிப்போர் முரசொலித்து விடு

சுகிக்கும் உலகு செய்,
சகியவளிடம் சாதனை செய்

சுற்றும் உலகை துய்த்து நிறுத்து.
முற்றும் துறந்த துறவு மறுத்து

காதலும் கடமையுமடங்கும்
சாதலும் செத்தொடுங்கும்

செத்தவனும் வரமாட்டான்
இருப்பவனும் உதவமாட்டான்

இருக்குமட்டும் அள்ளி விடு
கிடைக்குமட்டும் புதையலெடு

போதுமெனில் தள்ளி விடு
போற்றும்படியும் செய்து விடு