Wednesday, June 24, 2009

வேலை

காலம் போன காலை,
பாடம் புகட்டும் வேலை.

அரை ஞான் வயிற்றுக்கு
அறுபதாண்டு பசி.

முழுவாழ்வு கனவு
மூன்று வேலை உணவு

நரை திரை வந்தும் வாடா
உலை என் வயிறு.

காலமெல்லாம் சாப்பிட்டாலும்
காலனுக்கு சுவையாவேனோ!

எல்லோரையும் மறந்து
எல்லோரா கட்டப் போகிறோனோ!

அத்தனையும் இழந்து
அஜந்தாசிலை செய்யப் போகிறோனோ!

நரம்பெல்லாம் தோய்ந்து
நாளைக்கு சேமிப்பேனோ!

ஊனுடல் அழித்து பலர்க்கு
பல்லாக்கு சுமப்பேனோ!

ஏய்! அடிமை தேசமே!
பாம்பாட்டிக் கூட்டமே!

காலமெல்லாம் வேலை
ஓலை கட்டும் நாளை

எனக்கு மட்டுமா! இல்லை
எல்லோரும் இப்படித்தானா?

No comments:

Post a Comment