பசும்பொன் வாழ்த்து.
எனை ஈன்றதாய் வாழ்க !
தாய் தந்த மொழி வாழ்க !
எனை யார்க்கும் எந்தை வாழ்க !
எந்தை வாழ் இப்பூ வாழ்க !
அறிவுத்திரு வாழ்க !
அஃதீந்த ஆசான் வாழ்க !
இறையே எனைப் புறக்க
இயற்கையே உன்னை இரந்து
விசும்புகீழ் கரைநீக்கி
விவேகம் விளைந்தருள
பசும்பொன் தேவரவர்
பதங்கள் பற்றினமே !
Wednesday, June 24, 2009
வேலை
காலம் போன காலை,
பாடம் புகட்டும் வேலை.
அரை ஞான் வயிற்றுக்கு
அறுபதாண்டு பசி.
முழுவாழ்வு கனவு
மூன்று வேலை உணவு
நரை திரை வந்தும் வாடா
உலை என் வயிறு.
காலமெல்லாம் சாப்பிட்டாலும்
காலனுக்கு சுவையாவேனோ!
எல்லோரையும் மறந்து
எல்லோரா கட்டப் போகிறோனோ!
அத்தனையும் இழந்து
அஜந்தாசிலை செய்யப் போகிறோனோ!
நரம்பெல்லாம் தோய்ந்து
நாளைக்கு சேமிப்பேனோ!
ஊனுடல் அழித்து பலர்க்கு
பல்லாக்கு சுமப்பேனோ!
ஏய்! அடிமை தேசமே!
பாம்பாட்டிக் கூட்டமே!
காலமெல்லாம் வேலை
ஓலை கட்டும் நாளை
எனக்கு மட்டுமா! இல்லை
எல்லோரும் இப்படித்தானா?
காலம் போன காலை,
பாடம் புகட்டும் வேலை.
அரை ஞான் வயிற்றுக்கு
அறுபதாண்டு பசி.
முழுவாழ்வு கனவு
மூன்று வேலை உணவு
நரை திரை வந்தும் வாடா
உலை என் வயிறு.
காலமெல்லாம் சாப்பிட்டாலும்
காலனுக்கு சுவையாவேனோ!
எல்லோரையும் மறந்து
எல்லோரா கட்டப் போகிறோனோ!
அத்தனையும் இழந்து
அஜந்தாசிலை செய்யப் போகிறோனோ!
நரம்பெல்லாம் தோய்ந்து
நாளைக்கு சேமிப்பேனோ!
ஊனுடல் அழித்து பலர்க்கு
பல்லாக்கு சுமப்பேனோ!
ஏய்! அடிமை தேசமே!
பாம்பாட்டிக் கூட்டமே!
காலமெல்லாம் வேலை
ஓலை கட்டும் நாளை
எனக்கு மட்டுமா! இல்லை
எல்லோரும் இப்படித்தானா?
என்னவனின் ஆசைகள்
அவள் விழிகள்
அவள் செவிகள்
அவள் கூந்தல்
அவள் நடை
அவள் உடை
அவள் உதடு
அவள் நேர்வடு
அவள் கூந்தல்
அவள் புன்முறுவல்
நண்பனின் புலம்பல் இது
என் செவிக்கல்ல
அவன்தன் காகிதக் காதுகளுக்கு
பேனாவின் முனகலுக்கு.
அதே இளவலின் இயம்பல்
இளவேனில் பின்பனி புலம்பல்
காதல் பெரிதா? கடமை பெரிதா?
உதிர்த்தான் உதட்டில் பதிலும்
இரண்டையும் களித்து விடு
களிப்போர் முரசொலித்து விடு
சுகிக்கும் உலகு செய்,
சகியவளிடம் சாதனை செய்
சுற்றும் உலகை துய்த்து நிறுத்து.
முற்றும் துறந்த துறவு மறுத்து
காதலும் கடமையுமடங்கும்
சாதலும் செத்தொடுங்கும்
செத்தவனும் வரமாட்டான்
இருப்பவனும் உதவமாட்டான்
இருக்குமட்டும் அள்ளி விடு
கிடைக்குமட்டும் புதையலெடு
போதுமெனில் தள்ளி விடு
போற்றும்படியும் செய்து விடு
அவள் விழிகள்
அவள் செவிகள்
அவள் கூந்தல்
அவள் நடை
அவள் உடை
அவள் உதடு
அவள் நேர்வடு
அவள் கூந்தல்
அவள் புன்முறுவல்
நண்பனின் புலம்பல் இது
என் செவிக்கல்ல
அவன்தன் காகிதக் காதுகளுக்கு
பேனாவின் முனகலுக்கு.
அதே இளவலின் இயம்பல்
இளவேனில் பின்பனி புலம்பல்
காதல் பெரிதா? கடமை பெரிதா?
உதிர்த்தான் உதட்டில் பதிலும்
இரண்டையும் களித்து விடு
களிப்போர் முரசொலித்து விடு
சுகிக்கும் உலகு செய்,
சகியவளிடம் சாதனை செய்
சுற்றும் உலகை துய்த்து நிறுத்து.
முற்றும் துறந்த துறவு மறுத்து
காதலும் கடமையுமடங்கும்
சாதலும் செத்தொடுங்கும்
செத்தவனும் வரமாட்டான்
இருப்பவனும் உதவமாட்டான்
இருக்குமட்டும் அள்ளி விடு
கிடைக்குமட்டும் புதையலெடு
போதுமெனில் தள்ளி விடு
போற்றும்படியும் செய்து விடு
கரிசல் மண்; காலப் பயணம்;
கடந்து போன கனவுப் பயணம்.
முடிந்து போன முனைப்புப் பயணம்.
உருண்டு புரண்ட நாட்கள்
உவகை திரி நாட்கள்
கொடும் வெயில் நாட்கள்
கலைக்குளிர் கடந்த நாட்கள்
வெள்ளையம் மனிதரின் நாட்கள்
அடிதடி அடங்காதோர் நாட்கள்
திருவிழா உறுமிய நாட்கள்
திருமண உறவாடிய நாட்கள்
மறத்தியின் காதல்பார்வை நாட்கள்
மறவனின் திறத்தேடல் நாட்கள்
எத்தனை சொல்ல எதனை தள்ள
மூச்சு மறக்கும் வரை மறையாப் பயணம்.
மனதின் கடந்தகால கோல நினைவு
செலவில்லா அளவில்லா ஓரருமைப் உணர்வு.
கடந்து போன கனவுப் பயணம்.
முடிந்து போன முனைப்புப் பயணம்.
உருண்டு புரண்ட நாட்கள்
உவகை திரி நாட்கள்
கொடும் வெயில் நாட்கள்
கலைக்குளிர் கடந்த நாட்கள்
வெள்ளையம் மனிதரின் நாட்கள்
அடிதடி அடங்காதோர் நாட்கள்
திருவிழா உறுமிய நாட்கள்
திருமண உறவாடிய நாட்கள்
மறத்தியின் காதல்பார்வை நாட்கள்
மறவனின் திறத்தேடல் நாட்கள்
எத்தனை சொல்ல எதனை தள்ள
மூச்சு மறக்கும் வரை மறையாப் பயணம்.
மனதின் கடந்தகால கோல நினைவு
செலவில்லா அளவில்லா ஓரருமைப் உணர்வு.
உணர்வு
தாயின் மார்பில் தவழ்ந்த உணர்வு
தந்தை அரட்டலில் தவித்த உணர்வு
பாட்டி கதையில் சிலாகித்த உணர்வு
தாத்தா நடையில் கம்பீர உணர்வு
இளமாமா அழகில் லயித்த உணர்வு
அத்தை பாசத்தில் நனைந்த உணர்வு
தமிழாசான் தனித்தமிழ் தனி உணர்வு
நண்பன் நவில்ந்த நாடாளும் உணர்வு
கோயில் கொடுத்த குடும்ப உணர்வு
நூலகம் தந்த ஏழாவதறிவு உணர்வு
அவளின் விழிவீச்சில் விக்கிய உணர்வு
உள்ள உணர்வுகளில்
எதை உதற?
எதை உருக்கொள்ள?
அத்தனயும் பெற்ற முழு உரு நான்.
உணர்வருள் கொண்ட தெருவருள் நான்.
நானில் தான் எத்தனை பேர்நன்னடக்கம்!?
நான் நானன்று; நீயுமன்று;
விரிந்த திறந்த
விஞ்ஞான வியப்பு;
மெய்ஞான வியாபிப்பு.
அதுவொரு அறியா ஆன்மிகம்.
தெரியா தெய்வீகம்.
புரியா பூர்வீகம்.
கரையா கார்மேகம்.
நீர்க்கா நிறைகுடம்.
வற்றா பொருநை.
உணர்வுள்ளவரை நீ, நான்.
அது அற்றால் சூன்யம்.
அஃதும் ஆன்மிகம்!
அறிவோம் துய்ப்போம்
துள்ளல் துயில்கொள் வரை...
தாயின் மார்பில் தவழ்ந்த உணர்வு
தந்தை அரட்டலில் தவித்த உணர்வு
பாட்டி கதையில் சிலாகித்த உணர்வு
தாத்தா நடையில் கம்பீர உணர்வு
இளமாமா அழகில் லயித்த உணர்வு
அத்தை பாசத்தில் நனைந்த உணர்வு
தமிழாசான் தனித்தமிழ் தனி உணர்வு
நண்பன் நவில்ந்த நாடாளும் உணர்வு
கோயில் கொடுத்த குடும்ப உணர்வு
நூலகம் தந்த ஏழாவதறிவு உணர்வு
அவளின் விழிவீச்சில் விக்கிய உணர்வு
உள்ள உணர்வுகளில்
எதை உதற?
எதை உருக்கொள்ள?
அத்தனயும் பெற்ற முழு உரு நான்.
உணர்வருள் கொண்ட தெருவருள் நான்.
நானில் தான் எத்தனை பேர்நன்னடக்கம்!?
நான் நானன்று; நீயுமன்று;
விரிந்த திறந்த
விஞ்ஞான வியப்பு;
மெய்ஞான வியாபிப்பு.
அதுவொரு அறியா ஆன்மிகம்.
தெரியா தெய்வீகம்.
புரியா பூர்வீகம்.
கரையா கார்மேகம்.
நீர்க்கா நிறைகுடம்.
வற்றா பொருநை.
உணர்வுள்ளவரை நீ, நான்.
அது அற்றால் சூன்யம்.
அஃதும் ஆன்மிகம்!
அறிவோம் துய்ப்போம்
துள்ளல் துயில்கொள் வரை...
ஒர்குட் அறிவியல் பறவையே!
பாலாவைப் பார்த்தால் கேட்டதாக சொல்லவும்!
ஒரு வரியாயினும் வரையச் சொல்லவும்.
மருத்துவரிடமும் மறக்காமல்
இம்மருந்துச் சீட்டை மடிக்காமல் நீட்டவும்.
ரவியிடம் சிறு துளி அருமை துணுக்கு
தெளிக்க சொல்லவும் தெளிவுகள் தெரிய வர.
ஐசக்குக்கும் ஆசை தான்,
எழுத சொல்லவும் துள்ளி வரும்
வெங்களூர் அம்மணிகள் பார்த்தாவது.
அருமை ஆனந்திடம் கருத்து வேண்டாம்,
கவிதை மட்டும் போதும் என்று சொல்லவும்.
சுட்டாவது கவிக்கனிகள் தரச்சொல்லவும்.
நாங்கள் சூடு தனித்து சுவைக்க.
ஏ! ஒர்குட் பறவையே!
ஏறாத மலை ஏறி வீழாத வின் கோள் பற்றி
என் செந்தமிழ் செய்தி சேர்ப்பாய்!
அழகுத்தமிழ் ஆர்வம் சேர்ப்பாய்!
பாலாவைப் பார்த்தால் கேட்டதாக சொல்லவும்!
ஒரு வரியாயினும் வரையச் சொல்லவும்.
மருத்துவரிடமும் மறக்காமல்
இம்மருந்துச் சீட்டை மடிக்காமல் நீட்டவும்.
ரவியிடம் சிறு துளி அருமை துணுக்கு
தெளிக்க சொல்லவும் தெளிவுகள் தெரிய வர.
ஐசக்குக்கும் ஆசை தான்,
எழுத சொல்லவும் துள்ளி வரும்
வெங்களூர் அம்மணிகள் பார்த்தாவது.
அருமை ஆனந்திடம் கருத்து வேண்டாம்,
கவிதை மட்டும் போதும் என்று சொல்லவும்.
சுட்டாவது கவிக்கனிகள் தரச்சொல்லவும்.
நாங்கள் சூடு தனித்து சுவைக்க.
ஏ! ஒர்குட் பறவையே!
ஏறாத மலை ஏறி வீழாத வின் கோள் பற்றி
என் செந்தமிழ் செய்தி சேர்ப்பாய்!
அழகுத்தமிழ் ஆர்வம் சேர்ப்பாய்!
திராவிடம்
அவனவன் அவனவன் வயிற்றுக்கு சோறிடுகிறான்
திராவிடன் தமிழன் எவனேவனுக்கோ வழிவிடுகிறான்.
மலையாளம் மலையாளனுக்கு.
பொதிகைத் தமிழ்நாடு மார்வடிக்கா?
ஆந்திரம் தெலுங்கனுக்கு.
ஆரவாரத் தமிழகம் அனைவருக்கா?
களி கருநாடகம் கன்னடருக்கு..
தெளி தமிழகம் வந்தேரிகளுக்கா?
அவனவன் நிலத்தில் அவனவன் தொழிலில்
அவனவன் ஆதிக்கம். அதிகாரம்.
தாய் தமிழகத்தில் ஞான ஊற்று வித்துக்கள்தெருக்களில்
தொழில் தேடி, தொலைத்த வேலை தேடி.
என்னே கொடுமை! வேலை கொடுத்தவன்
வேளா வேளை வேலை தேடி.
எவனேவனுக்கோ அடிமை கூலியாய்,வந்தேரியாய், வறுமையகற்ற வாடிய பயிராய்.
திராவிடனை ஆரியம் அழித்ததாம்
மராத்தி, வடுகன், ராயரெல்லாம் ஆரியனாம்.
ஏனைய மாநிலத்தில் திராவிடம் இல்லை
ஏமாறவும் தயாரில்லை ஆறறிவு இன்றி.
இவன் செய்தெல்லாம் இந்தி தொலைத்து
இங்கிலீசு வளர்த்து தான்.
தமிழ் தொலைத்து தமிழர் வாழ்வு சமைத்தனர்.
திராவிடம் திரட்டி உலக அறிவு தொலைத்தனர்.
தொழில் வளம் இல்லை. நில வளம் இல்லை,
மன வளம் இல்லை. மாற்று வழி இல்லை,
நீர் இல்லை, நிலம் இல்லை,
மண்(ஈழம்) இல்லை, பொன்(கோலார்) இல்லை,
மானம் இல்லை, வீரம் இல்லை,
விலை பொருள் விற்க தெருள் நிலை இல்லை.
இல்லை இல்லை இல்லை
ஆனால் இருக்கு. இருக்கு
கரிசல் பொட்டக் காடுகள் இருக்கு
வேகாதவெயில் நோகும் கால்கள் இருக்கு
முனைபோன முனைவர் பட்டம் நிறையவே இருக்கு.
காசு கொடுத்தால் விதிதிருத்தும் அரசியல் இருக்கு.
ஒன்றா இரண்டா.. சொல்லிலடங்கா.. எண்ணிலடங்கா...
இருந்தும் வாழ்கிறோம் இளித்திழந்து வாழ்கிறோம்
சாவு தெரிந்தும் நாவு அரைத்துக் கொண்டே
அதை நாளும் நயந்து கொண்டே....
அவனவன் அவனவன் வயிற்றுக்கு சோறிடுகிறான்
திராவிடன் தமிழன் எவனேவனுக்கோ வழிவிடுகிறான்.
மலையாளம் மலையாளனுக்கு.
பொதிகைத் தமிழ்நாடு மார்வடிக்கா?
ஆந்திரம் தெலுங்கனுக்கு.
ஆரவாரத் தமிழகம் அனைவருக்கா?
களி கருநாடகம் கன்னடருக்கு..
தெளி தமிழகம் வந்தேரிகளுக்கா?
அவனவன் நிலத்தில் அவனவன் தொழிலில்
அவனவன் ஆதிக்கம். அதிகாரம்.
தாய் தமிழகத்தில் ஞான ஊற்று வித்துக்கள்தெருக்களில்
தொழில் தேடி, தொலைத்த வேலை தேடி.
என்னே கொடுமை! வேலை கொடுத்தவன்
வேளா வேளை வேலை தேடி.
எவனேவனுக்கோ அடிமை கூலியாய்,வந்தேரியாய், வறுமையகற்ற வாடிய பயிராய்.
திராவிடனை ஆரியம் அழித்ததாம்
மராத்தி, வடுகன், ராயரெல்லாம் ஆரியனாம்.
ஏனைய மாநிலத்தில் திராவிடம் இல்லை
ஏமாறவும் தயாரில்லை ஆறறிவு இன்றி.
இவன் செய்தெல்லாம் இந்தி தொலைத்து
இங்கிலீசு வளர்த்து தான்.
தமிழ் தொலைத்து தமிழர் வாழ்வு சமைத்தனர்.
திராவிடம் திரட்டி உலக அறிவு தொலைத்தனர்.
தொழில் வளம் இல்லை. நில வளம் இல்லை,
மன வளம் இல்லை. மாற்று வழி இல்லை,
நீர் இல்லை, நிலம் இல்லை,
மண்(ஈழம்) இல்லை, பொன்(கோலார்) இல்லை,
மானம் இல்லை, வீரம் இல்லை,
விலை பொருள் விற்க தெருள் நிலை இல்லை.
இல்லை இல்லை இல்லை
ஆனால் இருக்கு. இருக்கு
கரிசல் பொட்டக் காடுகள் இருக்கு
வேகாதவெயில் நோகும் கால்கள் இருக்கு
முனைபோன முனைவர் பட்டம் நிறையவே இருக்கு.
காசு கொடுத்தால் விதிதிருத்தும் அரசியல் இருக்கு.
ஒன்றா இரண்டா.. சொல்லிலடங்கா.. எண்ணிலடங்கா...
இருந்தும் வாழ்கிறோம் இளித்திழந்து வாழ்கிறோம்
சாவு தெரிந்தும் நாவு அரைத்துக் கொண்டே
அதை நாளும் நயந்து கொண்டே....
நடைமுறை (எதார்த்தம்)
உள்ளத்தில் ஊர் ஏக்கம்
நெடு நாள் துக்கம்
மரிப்பதும் பின் உதிப்பதும்
சிரிப்பதும் பின் சிலாகிப்பதும்
மாறி மாறி மாரியாய்
பெரும் மழையாய் என் மனதில்.
ஆர்வமாய் தினமும்
அழகாய் தினமும்
உழைப்புடன் தினமும்
களிப்புடன் தினமும்
தினவெடுத்து திரிய..
உள்ளம் விழைகிறது.
யாது செய்ய?
பிறந்தது குழப்ப பூமியில்.
வளர்ந்தது குழம்பிய குட்டையில்.
நீந்துவது அடிமை கடலில்.
நீந்தி தான் பார்க்கிறேன்..
அதன் ஆழமும் நீளமும்
கம்பி நீட்டிய படியே..
மாயப் படகில் மாயும் உலகில்
இது காலப் பயணம்
காலம் வரும், கரை வரும்,
காத்திருக்கிறேன்..
உள்ளத்தில் ஊர் ஏக்கம்
நெடு நாள் துக்கம்.
உள்ளத்தில் ஊர் ஏக்கம்
நெடு நாள் துக்கம்
மரிப்பதும் பின் உதிப்பதும்
சிரிப்பதும் பின் சிலாகிப்பதும்
மாறி மாறி மாரியாய்
பெரும் மழையாய் என் மனதில்.
ஆர்வமாய் தினமும்
அழகாய் தினமும்
உழைப்புடன் தினமும்
களிப்புடன் தினமும்
தினவெடுத்து திரிய..
உள்ளம் விழைகிறது.
யாது செய்ய?
பிறந்தது குழப்ப பூமியில்.
வளர்ந்தது குழம்பிய குட்டையில்.
நீந்துவது அடிமை கடலில்.
நீந்தி தான் பார்க்கிறேன்..
அதன் ஆழமும் நீளமும்
கம்பி நீட்டிய படியே..
மாயப் படகில் மாயும் உலகில்
இது காலப் பயணம்
காலம் வரும், கரை வரும்,
காத்திருக்கிறேன்..
உள்ளத்தில் ஊர் ஏக்கம்
நெடு நாள் துக்கம்.
வல்லமை தாராயோ!
அன்னைத் தமிழே! ஆறாவது அறிவுயிரே!!என்னை மனிதனாக்கி மானம், இனம் வகுத்து காத்து
நானிலம் போற்றும் நற்றமிழே! என் நறுந்தமிழே!
உனக்கும் உன் மைந்தர்களுக்கும் என் முதல் வணக்கம்!
ஏரிக்கரை கவியரங்க மாலை வணக்கம்!!
வல்லமை தாராயோ!
பொய்மையும் வஞ்சமும் பொசுங்கி அழிய
கயமையும் இன்மையும் கடல் கடந்தோட
வீரமும் காதலும் வீருபட எழ
வேல் கொண்டு வேள் காத்திட
வல்லமை தாராயோ!
அன்னை உன் பாதத்தில் அணிகலனாய் ஒலியெழுப்பி
ஆசையை அமுதாய் மழலைத் தமிழ் பேசி
மாலையில் மயங்கி உன் மடியில் உறங்கி
தாலாட்டு கேட்டு தாரணி ஆழ
வல்லமை தாராயோ!
சிரித்தாடும் மயிலினங்கள்
சிலிர்த்தோடும் மலையருவிகள்
தெம்மாங்கு குயிலினங்கள்
உடன்பிறப்பாய் ஊர்சுற்றும் பறவையினங்கள்
அங்கே மனிதம் மட்டும் மடுவாய்
ஏடெடுத்து சீர்படித்து மீட்டெடுக்க
வல்லமை தாராயோ!
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன் - போய்
காசு இருந்தால் சொல்லி அனுப்பு
கைபிடிக்க விளைகிறேன்
திருமண திருடல்களை தீர்வு செய்ய
திருத்தி எழுதி திசை செய்ய
வல்லமை தாராயோ!
அறிவும் ஆற்றலும் போய் சூது வாது பேசி
ஆண்மை அழிந்து வீரியம் சிதைந்து
விலங்கு பூட்டி விலங்காய் மாறிடும்
இக்கால மாக்களை கற்கால மாந்தராய் மாற்றிட
சிந்தை குளிர் சீர்தமிழ் தனியனாய் வலம் வர
வல்லமை தாராயோ!
அன்னிய மொழி கற்று நித்தம் அவருக்குழைத்து
சுயம் அழிந்து சுயதூயத்தமிழ் தொலைத்து
பொய்க்கனல் வீசி பொய்யுரை பேசி
ஏழையோரை ஏய்க்கும்
எம் உடன்பிறப்பை உருமாற்ற
வல்லமை தாராயோ!
வேருபாடி உலகின் கூறுபாடு உணர்ந்து
குற்றமும் குறையும் பொது
அதைகளைவதும் காப்பதும் பொது என
உள்ளத்தில் உள்ளதை உலகுக்கு உணர்த்தி
கபட எண்ணத்தை கனவிலும் பொசுக்கி
வேங்கை மார்பில் உலகு சுமக்க
வல்லமை தாராயோ!
தேனும் தினைமாவும் கம்பும் கிழங்கும்
தின்று தினவெடுத்து திரிந்த தமிழன்
கஞ்சிக்கும் காசுக்கும் வழியின்றி
அடிமையாய் அவலுறும் எறும்பாய் பிழைக்கும்
இம்மண்ணின் வீரிய வித்தினை
ஆல் போல் காக்க விழுது போல் வேரூன்றி நிலைக்க
வல்லமை தாராயோ!
ஏதோ அறிவியலை எட்டாக் கனிபோல்
ஐரோப்பாதான் உலக ஆணி வேர்போல்
பொய்யுரை பேசி மெய்யுரை அழித்து
புறப்பொருள் வாழ்வில் அகப்பொருள் தொலைத்து
இவ்விழிவு அகற்றி இல்லறம் நல்லறமாய் என்றும் வெல்லறமாய் வளர வலம் பெற
வல்லமை தாராயோ!
மலர்ந்தது மணம் வீசியது உதிர்ந்தது
இம்முக்கோண வாழ்க்கை வழக்கில்
மூன்றையும் முழுக்க உணர்ந்து
மானமுள்ள மனமுள்ள முனைப்புள்ள
மைந்தனாய் மாந்தனாய் புனிதனாய்
புது உருகொள்ள திரு வடிவெடுக்க
வல்லமை தாராயோ!
என் தாய் தமிழே! உயிர் தமிழே!
அன்னைத் தமிழே! ஆறாவது அறிவுயிரே!!என்னை மனிதனாக்கி மானம், இனம் வகுத்து காத்து
நானிலம் போற்றும் நற்றமிழே! என் நறுந்தமிழே!
உனக்கும் உன் மைந்தர்களுக்கும் என் முதல் வணக்கம்!
ஏரிக்கரை கவியரங்க மாலை வணக்கம்!!
வல்லமை தாராயோ!
பொய்மையும் வஞ்சமும் பொசுங்கி அழிய
கயமையும் இன்மையும் கடல் கடந்தோட
வீரமும் காதலும் வீருபட எழ
வேல் கொண்டு வேள் காத்திட
வல்லமை தாராயோ!
அன்னை உன் பாதத்தில் அணிகலனாய் ஒலியெழுப்பி
ஆசையை அமுதாய் மழலைத் தமிழ் பேசி
மாலையில் மயங்கி உன் மடியில் உறங்கி
தாலாட்டு கேட்டு தாரணி ஆழ
வல்லமை தாராயோ!
சிரித்தாடும் மயிலினங்கள்
சிலிர்த்தோடும் மலையருவிகள்
தெம்மாங்கு குயிலினங்கள்
உடன்பிறப்பாய் ஊர்சுற்றும் பறவையினங்கள்
அங்கே மனிதம் மட்டும் மடுவாய்
ஏடெடுத்து சீர்படித்து மீட்டெடுக்க
வல்லமை தாராயோ!
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன் - போய்
காசு இருந்தால் சொல்லி அனுப்பு
கைபிடிக்க விளைகிறேன்
திருமண திருடல்களை தீர்வு செய்ய
திருத்தி எழுதி திசை செய்ய
வல்லமை தாராயோ!
அறிவும் ஆற்றலும் போய் சூது வாது பேசி
ஆண்மை அழிந்து வீரியம் சிதைந்து
விலங்கு பூட்டி விலங்காய் மாறிடும்
இக்கால மாக்களை கற்கால மாந்தராய் மாற்றிட
சிந்தை குளிர் சீர்தமிழ் தனியனாய் வலம் வர
வல்லமை தாராயோ!
அன்னிய மொழி கற்று நித்தம் அவருக்குழைத்து
சுயம் அழிந்து சுயதூயத்தமிழ் தொலைத்து
பொய்க்கனல் வீசி பொய்யுரை பேசி
ஏழையோரை ஏய்க்கும்
எம் உடன்பிறப்பை உருமாற்ற
வல்லமை தாராயோ!
வேருபாடி உலகின் கூறுபாடு உணர்ந்து
குற்றமும் குறையும் பொது
அதைகளைவதும் காப்பதும் பொது என
உள்ளத்தில் உள்ளதை உலகுக்கு உணர்த்தி
கபட எண்ணத்தை கனவிலும் பொசுக்கி
வேங்கை மார்பில் உலகு சுமக்க
வல்லமை தாராயோ!
தேனும் தினைமாவும் கம்பும் கிழங்கும்
தின்று தினவெடுத்து திரிந்த தமிழன்
கஞ்சிக்கும் காசுக்கும் வழியின்றி
அடிமையாய் அவலுறும் எறும்பாய் பிழைக்கும்
இம்மண்ணின் வீரிய வித்தினை
ஆல் போல் காக்க விழுது போல் வேரூன்றி நிலைக்க
வல்லமை தாராயோ!
ஏதோ அறிவியலை எட்டாக் கனிபோல்
ஐரோப்பாதான் உலக ஆணி வேர்போல்
பொய்யுரை பேசி மெய்யுரை அழித்து
புறப்பொருள் வாழ்வில் அகப்பொருள் தொலைத்து
இவ்விழிவு அகற்றி இல்லறம் நல்லறமாய் என்றும் வெல்லறமாய் வளர வலம் பெற
வல்லமை தாராயோ!
மலர்ந்தது மணம் வீசியது உதிர்ந்தது
இம்முக்கோண வாழ்க்கை வழக்கில்
மூன்றையும் முழுக்க உணர்ந்து
மானமுள்ள மனமுள்ள முனைப்புள்ள
மைந்தனாய் மாந்தனாய் புனிதனாய்
புது உருகொள்ள திரு வடிவெடுக்க
வல்லமை தாராயோ!
என் தாய் தமிழே! உயிர் தமிழே!
Subscribe to:
Posts (Atom)