நடைமுறை (எதார்த்தம்)
உள்ளத்தில் ஊர் ஏக்கம்
நெடு நாள் துக்கம்
மரிப்பதும் பின் உதிப்பதும்
சிரிப்பதும் பின் சிலாகிப்பதும்
மாறி மாறி மாரியாய்
பெரும் மழையாய் என் மனதில்.
ஆர்வமாய் தினமும்
அழகாய் தினமும்
உழைப்புடன் தினமும்
களிப்புடன் தினமும்
தினவெடுத்து திரிய..
உள்ளம் விழைகிறது.
யாது செய்ய?
பிறந்தது குழப்ப பூமியில்.
வளர்ந்தது குழம்பிய குட்டையில்.
நீந்துவது அடிமை கடலில்.
நீந்தி தான் பார்க்கிறேன்..
அதன் ஆழமும் நீளமும்
கம்பி நீட்டிய படியே..
மாயப் படகில் மாயும் உலகில்
இது காலப் பயணம்
காலம் வரும், கரை வரும்,
காத்திருக்கிறேன்..
உள்ளத்தில் ஊர் ஏக்கம்
நெடு நாள் துக்கம்.
Wednesday, June 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment