Wednesday, June 24, 2009

திராவிடம்

அவனவன் அவனவன் வயிற்றுக்கு சோறிடுகிறான்
திராவிடன் தமிழன் எவனேவனுக்கோ வழிவிடுகிறான்.

மலையாளம் மலையாளனுக்கு.
பொதிகைத் தமிழ்நாடு மார்வடிக்கா?

ஆந்திரம் தெலுங்கனுக்கு.
ஆரவாரத் தமிழகம் அனைவருக்கா?

களி கருநாடகம் கன்னடருக்கு..
தெளி தமிழகம் வந்தேரிகளுக்கா?

அவனவன் நிலத்தில் அவனவன் தொழிலில்
அவனவன் ஆதிக்கம். அதிகாரம்.

தாய் தமிழகத்தில் ஞான ஊற்று வித்துக்கள்தெருக்களில்
தொழில் தேடி, தொலைத்த வேலை தேடி.

என்னே கொடுமை! வேலை கொடுத்தவன்
வேளா வேளை வேலை தேடி.

எவனேவனுக்கோ அடிமை கூலியாய்,வந்தேரியாய், வறுமையகற்ற வாடிய பயிராய்.

திராவிடனை ஆரியம் அழித்ததாம்
மராத்தி, வடுகன், ராயரெல்லாம் ஆரியனாம்.

ஏனைய மாநிலத்தில் திராவிடம் இல்லை
ஏமாறவும் தயாரில்லை ஆறறிவு இன்றி.

இவன் செய்தெல்லாம் இந்தி தொலைத்து
இங்கிலீசு வளர்த்து தான்.

தமிழ் தொலைத்து தமிழர் வாழ்வு சமைத்தனர்.
திராவிடம் திரட்டி உலக அறிவு தொலைத்தனர்.

தொழில் வளம் இல்லை. நில வளம் இல்லை,
மன வளம் இல்லை. மாற்று வழி இல்லை,
நீர் இல்லை, நிலம் இல்லை,
மண்(ஈழம்) இல்லை, பொன்(கோலார்) இல்லை,
மானம் இல்லை, வீரம் இல்லை,
விலை பொருள் விற்க தெருள் நிலை இல்லை.

இல்லை இல்லை இல்லை
ஆனால் இருக்கு. இருக்கு
கரிசல் பொட்டக் காடுகள் இருக்கு
வேகாதவெயில் நோகும் கால்கள் இருக்கு
முனைபோன முனைவர் பட்டம் நிறையவே இருக்கு.
காசு கொடுத்தால் விதிதிருத்தும் அரசியல் இருக்கு.

ஒன்றா இரண்டா.. சொல்லிலடங்கா.. எண்ணிலடங்கா...
இருந்தும் வாழ்கிறோம் இளித்திழந்து வாழ்கிறோம்
சாவு தெரிந்தும் நாவு அரைத்துக் கொண்டே
அதை நாளும் நயந்து கொண்டே....

No comments:

Post a Comment